Thursday, 6 January 2011

எனக்கு பிடித்த விஜய் பாடல்கள் 10.

விஜய் ரசிகை என்றதும் நண்பர் டிலீப் என்னிடம் இருந்து தொடர் பதிவை எதிர்பார்க்கின்றேன் என கூறினார் அதற்கமைய எனக்கு பிடித்த பாடல்களை வரிசைப்படுத்தியுள்ளேன்.

01. எனது 1வது தெரிவுப்பாடல் 1997 இல்  விஜய் சுவலட்சுமி நடித்து வெளியான "Love Today" படத்திலிருந்து...
பாடல் :- ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் கண்ணில்......
பாடியவர் :-Unnikrishnan 
இசை  :-Siva

இப்பாடலில் ரொம்ப பிடித்தது வரிகள் " உன் வாயால் என் பெயர் சொன்னால் உன்காலடியில் கிடப்பேன். தூக்கத்தை தொலைத்தேனே துடிக்குது நெஞ்சம்......"
............................................................................................................................

 02. எனது 2வது தெரிவு பாடல் 1996 இல்  விஜய் சங்கீதா நடித்து வெளியான "பூவே உனக்காக" படத்திலிருந்து ....
பாடல் :- சொல்லாமலே யார் பார்த்தது நெஞ்சோடுதான்.....
பாடியவர்கள் :-P. Jayachandran, Chitra
இசை  :-SA.Rajkumar

 இப்பாடலில் பிடித்த வரிகள் "சொல்லாமலே யார் பார்த்தது.. நெஞ்சோடு தான் பூப்பூத்தது... மழை சுடுகின்றதே அடி அது காதலா... வெயில் குளிர்கின்றதே அடி இது காதலா" பசி வந்தால் பத்தும் பறந்திடும் என்று சொன்னார்கள் ஆனால் காதல் வந்தால் பசியே பறந்திடும்..
............................................................................................................................

03. எனது 3வது தெரிவாக 1995 ல் விஜய்  வனிதா விஜயகுமார் நடித்து வெளியான "சந்திரலேகா" படத்திலிருந்து
பாடல் :- அல்லா உன் ஆணைப்படி எல்லாம்....
பாடியவர்கள் :- Unnikrishnan
இசை  :- Illayaraja

இப்பாடலில் பிடித்த வரிகள் "உயிர்காதல் இன்று உண்டானது  இரு ஜீவன் ஒன்று என்றானது"
............................................................................................................................

04. எனது 4வது தெரிவாக 1999 இல் விஜய்  ரம்பா நடித்து வெளியான என்றென்றும் காதல் படத்திலிருந்து.
பாடல்  :- ஓ தென்றலே என்தோழில் சாயவா.....
பாடியவர்கள் :-SP. Balasubramaniam, Anuradha Sriram 
இசை :-Manoj

இப்பாடலில் ஒவ்வொரு வரிகளும் சூப்பர் "நான் நடக்கும் அந்த சாலை பூ உதிர்க்கும் அந்த சோலை நலங்கள் சொல்லு.. ஓ தென்றலே... முதல் காதல் முதல் முத்தம்  ரெண்டும் மறக்குமா....நெஞ்சில் தங்கும் ஞாபகங்கள் வண்ணம் இழக்குமா?  இடம் காலம் மாறும் போதும் என் பாசம் மாறுமா??? ரொம்ப ரொம்ப பிடித்த வரிகள்
............................................................................................................................

05. எனது 5 வது தெரிவாக  2002 இல்  விஜய் சிம்ரன் நடித்து வெளியான "உதயா" படத்திலிருந்து
பாடல்   :- உதயா உதயா உளறுகிறேன் உயிரால் உனையே......
பாடியவர்கள் :-Hariharan, Sadhana Sargam 
இசை :-AR.Rahman
" உன்பாதி நான் வாழ்கிறேன் ..என் பாதி தேய்கிறேன்.... என்னை தொலைத்துவிட்டேன் உன்னை அடைந்து விட்டேன்" நல்ல வரிகள்
............................................................................................................................

06. அடுத்து தெரிவாக 2005 இல்  விஜய் ஜெலினியா நடித்து வெளியான "சச்சின்" படத்திலிருந்து
பாடல்:- கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே......
பாடியவர்  :-Devi Sri Prasad
இசை  :-Devi Sri Prasad

 என் 5 வயது குட்டிப்பொண்ணுக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்.. 2 வயதில் இருந்தே அவ விஜய் சூர்யா ரசிகை...
இப்பாடல் திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டே இருக்கலாம்....
............................................................................................................................

07.. எனது 7 வது தெரிவாக 2008 இல் விஜய் த்ரிஷா நடித்து வெளியான  "குருவி" படத்திலிருந்து

பாடல்   :-தேன் தேன் தேன் உன்னை தேடி அலைந்தேன்..
பாடியவர்கள்   :- Udit Narayan, Shreya Ghoshal
இசை  :-Vidyasakar

 இப்பாடலின் இசை அருமை. இப்பாடலில் வரும் காட்சிகள் அருமை..
............................................................................................................................

08. அடுத்த தெரிவாக 1999 இல்  விஜய் சிம்ரன் நடித்து வெளியான   "துள்ளாத மனமும் துள்ளும்" படத்திலிருந்து
பாடல்  :-இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை...
பாடியவர்   :-Unnikrishnan
இசை  :-SA.Rajkuma

இப்பாடலில் வரும் அத்தனை வரிகளும் மிக அருமை..அதில் எனக்கு ரொம்ப பிடித்த வரிகள் "தேடும் முன்னே வந்த பொருள் வாழ்வில் நிலைப்பதில்லை.. தேடித்தேடிக் கண்ட பொருள் எளிதில் தொலைவதில்லை"
............................................................................................................................

09. அடுத்த பாடலாக  2000  இல்  விஜய் ஜோதிகா நடித்து வெளியான "குஷி" படத்திலிருந்து
பாடல்:- யார் சொல்வதோ  யார் சொல்வதோ.....
பாடியவர்கள்:-Hariharan, Sadhana Sargam
இசை:- தேவா

"கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கிக் கிடக்கும்..  சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்...
அது கல்லின் தோல்வியா? இல்லை  உளியின் வெற்றியா?" அனைத்து வரிகளும் சூப்பர்...நம்ம ஜோதிகாவின் சின்னபிள்ள தனமான டான்ஸ் பார்த்துக்கொண்டே இருக்கலாம்..
............................................................................................................................

 10. கடசிப்பாடலாக 1997 இல் விஜய் ஷாலினி நடித்து வெளிவந்த "காதலுக்கு மரியாதை" படத்திலிருந்து
பாடல்:- என்னை தாலாட்ட வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ....
இசை:- இளையராஜா
 இப்படத்தில் அனைத்துப்பாடல்களும் சூப்பர்.. இருப்பினும் அதிகமாக பிடித்த பாடல் " பூ விழி பார்வையில் மின்னல் காட்டினால்.. ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்... ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாய் இரவும் பகலும் என்னை வாட்டினாய்....இதயம் அவள் பெயரில் மாற்றினாள்..."
 ............................................................................................................................
குறிப்பு: நண்பிகள்  ஜெ.ஜெ, ஆமினா தொடர் பதிவுக்கு அழைத்திருந்துள்ளீர்கள். நேரம் போதமையாக உள்ளது. விரைவில் பதிவிடுவேன் நண்பிகளே..

19 comments :

டிலீப் said...

யார் சொல்வதோ யார் சொல்வதோ.....,
உதயா உதயா உளறுகிறேன் உயிரால் உனையே...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்
நன்றி பிரஷா தொடர்பதிவிட்டமைக்கு.

Anonymous said...

i love these songs (love today and chanralega)

test said...

முதல் இரண்டு பாடல்களும், உதயா உதயாவும் (ரஹ்மான்) எனக்குப் பிடிக்கும்!

Philosophy Prabhakaran said...

பிரஷா... உங்க பதிவுலக வாழ்க்கையில் மற்றுமொரு வலைப்பூவா... கலக்குங்க...

ராஜகோபால் said...

ஆஹா எனக்கு பதிவு போடா ஐடியா கிடைச்சுடுச்சு
"எனக்கு பிடிக்காத விஜய் பாடல்கள் 10 ".

சக்தி கல்வி மையம் said...

Really Good collections

Priya said...

உங்கள் பாடல் தேர்வுகள் நல்லா இருக்கு!
அதில்... முதல் மற்றும் கடைசிப்பாடல் எனக்கு மிகவும் பிடித்தவை!

Jaleela Kamal said...

எல்லா பாடல் தேர்வுகளும் அருமை . பிரஷா, கடைசி மூன்று தேர்வு ரொம்ப சூப்பர்,

goma said...

அருமையான கலெக்‌ஷன்
உங்கள் தேர்வில் என் ரசனைப்படி ஒரு மாற்றம் .
8வது பாடலுக்கு நான் தருவது முதல் இடம்.
எப்பொழுது கேட்டாலும் எத்தனை முறை கேட்டாலும்,

துள்ளாத மனமும் துள்ளும்

சக்தி கல்வி மையம் said...

அருமையான கலெக்‌ஷன்,

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

டிலீப் said...
நன்றி டிலீப்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@tharsha
நன்றி தர்ஷா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜீ...
நன்றி ஜீ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Philosophy Prabhakaran
முயற்சிதான்..நன்றி பிரபா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ராஜகோபால்
:) பதிவிடுங்கள் பார்கலாமே... விஜய் பாடல்கள் எனறும் நிலையானவை..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Priya
நன்றி பிரியா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Jaleela Kamal
நன்றி சகோ..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@goma
நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@sakthistudycentre-கருன்
நன்றி கருன்